Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
பவானி பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சுமங்கலி பெண்கள் பங்கேற்ற சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.
வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு ஏராளமான சுமங்கலி பெண்கள் கோவிலில் திரண்டனர். அவர்கள் தேங்காய், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தாம்பூலத் தட்டில் வைத்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் சந்தனத்தால் சுவாமி உருவாக்கப்பட்டு, அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் மாங்கல்ய கயிறு மற்றும் வரலட்சுமி விரத நோன்புக் கயிறு கட்டிக்கொண்டு வழிபட்டனர்.
இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P