Enter your Email Address to subscribe to our newsletters

குடியாத்தம், 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள மிக பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மாசுபடா அம்மன் கோயில் ஆடி 6 ம் வெள்ளி முன்னிட்டு 1008 பெண்களின் பால் குட ஊர்வலம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து காமாட்சியம்மன் பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலிருந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின் பால் குட ஊர்வலம் நடைபெற்றது.
இதில் விரதம் இருந்த பெண்காள் செவ்வாடை அணிந்து தலையில் பால் குடங்களை ஏந்தியவாறு சென்றனர் அப்போது மேளதாளங்கள் கையிலாத வாத்தியங்கள் முழுங்கவும் நடைபெற்றது.
மேலும் சாமி வேடங்கள் அணிந்து வந்தனர் நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்றது பின்னர் கோயில் வந்தடைந்தது இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீப ஆராதனை நடைபெற்றது.
பால் பால் குட ஊர்வலத்தினை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் 5 வகையான உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
Hindusthan Samachar / Durai.J