ஆந்திராவில் இருசக்கர வாகன திருட்டு- 6 பேர் கொண்ட கும்பல் கைது!
திருப்பதி , 22 ஆகஸ்ட் (ஹி.ச.) திருப்பதி மாவட்டம் சந்திரகிரி பகுதியில், இருசக்கர வாகனங்கள் திருடிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 18 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல் செய
A


திருப்பதி , 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருப்பதி மாவட்டம் சந்திரகிரி பகுதியில், இருசக்கர வாகனங்கள் திருடிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 18 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பதி, சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலைய எல்லைகளில் இந்தக் கும்பல் வாகனத் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி, சந்திரகிரி போலீசார் கும்பலை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில், ஸ்ரீனிவாசமங்காபுரம் அருகே காப்புக்காடு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் மீட்கப்பட்டன.

வழக்கை சிறப்பாக விசாரித்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களை திருப்பதி மாவட்ட எஸ்.பி. எல். சுப்பராயுடு, ஐபிஎஸ். பாராட்டினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA