நீங்க வர்றீங்கனுதான் அப்பா பைக்கை ஒளிச்சு வச்சிருக்காரு -போலீசிடம் போட்டுக்கொடுத்த 6 வயது சிறுவன்!
திருப்பதி , 22 ஆகஸ்ட் (ஹி.ச.) நெல்லூர் மாவட்டம் அனந்தசாகரம் பகுதியில் காவல் துறையினர் வழக்கமான கார்டன் சேர்ச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் வாகனங்கள் மற்றும் அவற்றின் ஆவணங்களை தீவிரமாகத் தணிக்கை செய்து
A


திருப்பதி , 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

நெல்லூர் மாவட்டம் அனந்தசாகரம் பகுதியில் காவல் துறையினர் வழக்கமான கார்டன் சேர்ச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் வாகனங்கள் மற்றும் அவற்றின் ஆவணங்களை தீவிரமாகத் தணிக்கை செய்து வந்தனர்.

இந்தச் சோதனையின் போது, சுரேஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்திற்குச் சரியான ஆவணங்கள் இல்லாததால், பிடிபட்டுவிடும் என்ற பயத்தில் அதை அருகில் உள்ள தெருவில் இருக்கும் ஒரு வீட்டில் மறைத்து வைத்துள்ளார்.

போலீசார் சோதனையிடுவதற்காகச் சுரேஷின் வீட்டிற்கு வந்தபோது, அவரது 6 வயது மகனான மகேந்திரா, நீங்க வர்றீங்கனு தெரிஞ்சுதான் எங்க அப்பா பைக்கை ஒளிச்சு வச்சிருக்காரு என்று மழலை மாறாமல் கூறி, அந்த பைக்கை மறைத்து வைத்திருந்த இடத்திற்கே போலீசாரை அழைத்துச் சென்று காட்டிக் கொடுத்துள்ளான்

சிறுவனின் இந்த நிர்மலமான உண்மையைப் பார்த்துப் போலீசாரும் அங்கிருந்தவர்களும் சிரிப்பை அடக்க முடியாமல் வியந்துபோயினர்.

தற்போது இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA