10 கோடிக்கு இவ்வளவு கூச்சலா? -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை விமர்சித்த நாராயணன் திருப்பதி
சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை பனகல் மாளிகை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களுடைய மாணவர்களிடம் இருக்கும் ஒழுக்கத்தை நீங்கள் எங்கும் பார்க்க முடியாது. அவர்களுக்கு நாங்கள் பயி
Narayanan Thirupathi


சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை பனகல் மாளிகை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

எங்களுடைய மாணவர்களிடம் இருக்கும் ஒழுக்கத்தை நீங்கள் எங்கும் பார்க்க முடியாது. அவர்களுக்கு நாங்கள் பயிற்சி தருகிறோம்.

சாய் குமார் ஐஏஎஸ் இங்கு நியமிக்கப்பட்டவர் அல்ல. தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டவர். அவருக்கு ஏன் பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும்.

அவரை பதவி நீக்கம் செய்துவிட்டு உங்களுக்கு வேண்டிய ஒரு நபரை நிரந்தர தலைமைச் செயலாளராக நியமியுங்கள். யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால் சாய்குமார் ஐஏஎஸ் வேண்டாம்.

உயர்கல்வி ஆணையர் ஒரு சுற்றறிக்கை அனுப்பி அவரிடம் விசாரணை நடக்கிறது. அதேபோல சாய்குமார் ஐஏஎஸ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாய்குமாருக்கும் நோட்டீஸ் அனுப்புங்கள்.

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இருக்கிறார்களா? அல்லது அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் அரசு இருக்கிறதா?

இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும். வேறு யாரும் விளக்கம் கொடுக்க முடியாது.

இந்த பிரச்னையில் யார் காரணமோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறு செய்த வட்டாட்சியர், உயர்கல்வி ஆணையர், தலைமைச் செயலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஆட்சி தொடர்வதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு கொடுத்திருக்கிறது. இதைத் தெரியாதவரா மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர்.

கம்யூனிஸ்டுகள் ஆதரவு கொடுத்ததால்தான் இந்த அரசு நீடிக்கிறது என்று தெரிந்தபிறகும் இடதுசாரிகள் மீது இந்த உள்நோக்கத்தோடு சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது என்று சொன்னால் அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தப் போகிறீர்களா? அல்லது இடதுசாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சியைத் தொடரப் போகிறீர்களா? இதுதான் அடிப்படையான கேள்வி.

இந்த நடவடிக்கைகளை நாங்கள் சகித்துக்கொள்ள முடியாது. இந்த பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என்றார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் தளத்தில்,

10 கோடிக்கு இவ்வளவு கூச்சலா? ஒழுங்காக திமுக கூட்டணியிலிருந்திருந்தாலே 10 கோடி கிடைத்திருக்குமே? அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகி விட்டதே! சும்மா கத்திக்கொண்டிருக்காமல் சட்டு புட்டுன்னு ஒரு முடிவு எடுக்கவும் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN