மேகமலை அருவிக்கு தடை நீட்டிப்பு - பாதுகாப்பு தடுப்புகள் சேதத்தால் வனத்துறை நடவடிக்கை
தேனி, 22 ஆகஸ்ட் (ஹி.ச.) தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பிரசித்தி பெற்ற மேகமலை அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல விதிக்கப்பட்ட தடை 37-வது நாளாக இன்றும் தொடர்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக அமைந்துள்ள மேகமலை, தேனியின் முக்
Ban on Meghamalai Falls extended


தேனி, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பிரசித்தி பெற்ற மேகமலை அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல விதிக்கப்பட்ட தடை 37-வது நாளாக இன்றும் தொடர்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக அமைந்துள்ள மேகமலை, தேனியின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள அருவியில் குளிக்கவும், இயற்கை அழகை ரசிக்கவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினமும் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் தூண்கள் கடுமையாக சேதமடைந்தன.

அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதோடு, பாதுகாப்பு கட்டமைப்புகள் உடைந்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் தற்காலிக தடை விதித்தனர். இந்த தடை தொடர்ந்து 37 நாட்களாக நீடித்து வருகிறது. இதனால் மேகமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

சேதமடைந்த தடுப்புகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், பணிகள் முழுமையாக நிறைவடைந்து பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகே மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b