Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
வேளச்சேரி பகுதியில் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த 25 வயது இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேளச்சேரி மருதுபாண்டி தெருவைச் சேர்ந்தவர் பாலுசாமி (28). இவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் இருப்பதால், போலீசாரின் சரித்திரப் பதிவேட்டில் இடம்பெற்றுள்ள குற்றவாளி என கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதி வேளச்சேரி பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 25 வயது இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பாலுசாமி, தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, பாலுசாமி அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது. சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வேளச்சேரி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இளம்பெண் அளித்த தகவல்கள் மற்றும் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் பாலுசாமியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் வேளச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ