நீட் தேர்விற்கு எதிராக தி.க. சார்பில் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் - சென்னையில் கலி.பூங்குன்றன் தொடங்கி வைத்தார்
சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.) மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் மற்றும் உயர் சாதியினருக்கான பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திராவ
நீட் தேர்விற்கு எதிராக  தி.க. சார்பில் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் - சென்னையில் கலி.பூங்குன்றன் தொடங்கி வைத்தார்


சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் மற்றும் உயர் சாதியினருக்கான பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் தொடங்கியுள்ளது.

இந்தப் பரப்புரைப் பயணத்தின் தொடக்க நிகழ்ச்சி சென்னை வேப்பேரியில் இன்று நடைபெற்றது.

பயணத்தை திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பரப்புரையின் போது, சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவு பறிக்கப்படுவதாகவும், இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையை சிதைக்கும் வகையில் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு அமைந்துள்ளதாகவும் பிரச்சாரம் செய்யப்பட உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் முக்கிய நகரங்கள், கிராமங்கள் வழியாகச் செல்லும் இந்த இருசக்கர வாகனப் பேரணி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, மத்திய அரசின் இந்த முடிவுகளுக்கு எதிராக மக்கள் கருத்தை திரட்டும் நோக்கில் நடத்தப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b