மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க செயற்குழு கூட்டம் - முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச) திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது. கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வ
மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக செயற்குழு கூட்டம் - முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு


சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச)

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது. கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவின் செயற்குழு முதல் முறையாக கூடுவதால் இந்தக் கூட்டம் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும் என்றும், கட்சியை வருங்காலத்தில் வலுப்படுத்துவதற்கான செயல்திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செயற்குழு கூட்டத்தில் கட்சியின் கட்டமைப்பு ரீதியாக பல்வேறு அதிரடி மாற்றங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, தற்போது 77 ஆக உள்ள மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்துவது குறித்த அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் கட்சியின் நிர்வாகத்தை மேலும் பரவலாக்கி, அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்த தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அதுமட்டுமின்றி, மாவட்ட செயலாளர்களுக்கு குறிப்பிட்ட பதவிக்காலம் நிர்ணயம் செய்வது தொடர்பான முக்கிய அறிவிப்பும் இன்றைய கூட்டத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய நடைமுறை மூலம் கட்சியில் இளைஞர்களுக்கும், புதிய நிர்வாகிகளுக்கும் வாய்ப்பு வழங்கும் நோக்கம் கொண்டதாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b