Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் உதவியாளர் ஹரிகிருஷ்ணன் உயிரிழப்புக்கு, அவரின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
என்னுடைய உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் அவர்கள் மறைவெய்திய செய்தியால் மிகவும் மனம் வருந்தி நிற்கிறேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் சென்னை மேயராகப் பொறுப்பு வகித்தபோது, மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி, பின்னர் அந்தப் பொறுப்பிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, என்னுடைய உதவியாளராக நெடுங்காலம் பணியாற்றியவர் அவர். என் உழைப்புக்கு உறுதுணையாக, காலநேரம் பாராது - கண் துஞ்சாது அவர் பணியாற்றிய காட்சிகளெல்லாம் நினைவலைகளாய் என்னுள் எழுந்து, நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன; துயரை அதிகரிக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாகப் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த அவர், அண்மையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்று நீடுதுயில் கொண்டுவிட்டார்.
பழகுதற்கினிய குணம் கொண்ட
ஹரிகிருஷ்ணன் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள்,
நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய ஆறுதலை உரித்தாக்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN