Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
மீன் குழம்பு அல்லது சூப் சமைக்கும்போது பலர் மீன் கண்களைத் தூக்கி எறிந்துவிடுகிறார்கள். இருப்பினும், மீன் கண்களில் சிறந்த ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, புரதங்கள் மற்றும் ஒமேகா-டிஹெச்ஏ ஆகியவை நிறைந்துள்ளன. மீன் கண்களைச் சாப்பிடுவது பார்வைக் குறைபாடுகளைக் குறைத்து, கண்பார்வையை மேம்படுத்துகிறது. மூளையின் செயல்பாடு வேகமடைகிறது மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கிறது. இதய நோய்களின் அபாயத்தைக் குறைப்பதுடன், இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும், மீன் கண்களைச் சாப்பிடுவதால் இன்னும் பல நன்மைகள் உள்ளன.
மீனின் இந்த பகுதியில் வைட்டமின் ஏ, ஒமேகா-3, இரும்பு, துத்தநாகம், கால்சியம் அதிகம் உள்ளது. இது கண், மூளை, எலும்பு, நோய் எதிர்ப்பு சக்திக்கு நன்மை தரும்.
மீன் அசைவ உணவுகளில் மிகச்சிறந்த உணவாகும் ஒன்றாகும். குறிப்பாக அதன் சதைப் பகுதியைக் காட்டிலும் தலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனாலும் பலரும் மீன் தலையை ஒதுக்கி வைத்துவிட்டு சதையை மட்டும்தான் சாப்பிடுவார்கள். மிகச் சிலர் மட்டுமே தலையையும் சேர்த்து சாப்பிடுவார்கள். உண்மையிலேயே, மீன் தலையில்தான் இறைச்சியை விட அதிக தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் உள்ளன என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
மீன் கண்கள் சாப்பிடுவதன் நன்மைகள் :
பார்வை கூர்மையாகும்
மீன் கண்கள் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. ஏனெனில் மீன் கண்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது பார்வைக் கோளாறை நீக்கிவிடும்.
எனவே கண்பார்வை பிரச்சினை உள்ளவர்கள் அடிக்கடி மீன் கண்கள் சாப்பிட்டுங்கள். உங்களது பார்வை மேம்படும்.
மூளைக்கு நல்லது :
சில ஆய்வுகள் படி தினமும் மீனுடன் மீன் கண்ணையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும். அதாவது ஞாபகம் மறதி இனி இருக்கது. உங்களது நினைவாற்றல் மேம்படும். எனவே, உங்களது மூளை ஷார்பாக இருக்க அடிக்கடி மீன் கண்கள் சாப்பிடுங்கள்.
சர்க்கரை நோய்க்கு நல்லது:
மீனில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி உடலில் இன்சுலின் அளவை குறைத்து, சர்க்கரை நோயை தடுக்கும். மேலும் நீங்கள் அடிக்கடி மீன் கண்கள் சாப்பிட்டு வந்தால் டைப் 1 நீரிழிவு நோயின் அபாயம் குறையும்.
மூட்டு வலி குறையும் :
அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மீன் கண்களில் ஏராளமாக நிறைந்துள்ளன. எனவே மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து விடுபட அடிக்கடி மீன் கண்களை சாப்பிடுங்கள்.
ஆஸ்துமாவிற்கு நல்லது:
ஆய்வு ஒன்றில், குழந்தைகளுக்கு மீன் கண்கள் கொடுத்தால் ஆஸ்துமாவின் அபாயம் குறையும் என்று கண்டறிந்துள்ளனர். ஆனால் பெரியவர்களுக்கு இது எந்தவித பலனையும் தராது.
கொலஸ்ட்ராலை குறைக்கும் :
மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகளவு நிறைந்துள்ளதால் இது உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV