Enter your Email Address to subscribe to our newsletters

கோவை , 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி. உள்ளிட்ட அரசு பணியாளர் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், Getair1 நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.
Getair1 செயலி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த நடைப்பயணத்தை முன்னாள் துணை ஆட்சியர் கணபதி தொடங்கி வைத்தார்.
இதில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் அரசு பணிகளில் ஆர்வம் கொண்டவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக துணை ஆட்சியர்கள் முருகன், மகேஸ்வரி மற்றும் ஸ்டார்ட் அப் பயணம் நவீன் கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Getair1 செயலி குறித்து அதன் நிறுவனர் மார்க்கண்டன் மற்றும் இணை நிறுவனர் சங்கீதா கூறுகையில்,
தமிழக மாணவர்களிடம் திறமையும் அறிவும் அதிகளவில் இருப்பதாகவும், ஆனால் சரியான வழிகாட்டுதல், தொடர்ச்சியான பயிற்சி மற்றும் தங்களின் பலம்–பலவீனங்களை புரிந்து கொண்டு தயாராவது போட்டித் தேர்வுகளில் வெற்றிக்கு முக்கியமானது என்றும் தெரிவித்தனர்.
மாணவர்கள் தங்களின் பலவீனமான பாடங்கள் மற்றும் பகுதிகளை (Weak Areas) அடையாளம் கண்டு, அவற்றில் அதிக கவனம் செலுத்தி, தங்களின் வலுவான பகுதிகளை (Strong Areas) மேலும் மேம்படுத்தும் வகையில் Getair1 செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட பயிற்சி, தேர்வு செயல்திறன் மதிப்பீடு மற்றும் தொடர்ந்து முன்னேற்றத்தை கண்காணிக்கும் வழிகாட்டுதல்கள் மூலம் தேர்வுக்குத் தயாராகும் முறையை எளிமைப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என தெரிவித்தனர்.
மேலும், Getair1 செயலி வாயிலாக ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் மற்றும் பல்வேறு பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படுவதால், டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி. உள்ளிட்ட அரசு பணியாளர் தேர்வுகளுக்கு மாணவர்கள் திட்டமிட்டு தயாராகி, தங்களது வெற்றி வாய்ப்பை மேம்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவித்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA