Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு மூன்று இருசக்கர வாகனங்கள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த பயங்கர மோதலில் வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன. இந்த விபத்தில் சிக்கிய தருண் மற்றும் சஞ்சீவிராமன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதே விபத்தில் சிக்கிய நவீன்குமார் என்பவர் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர், படுகாயமடைந்த நவீன்குமாரை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிவேகம் அல்லது எதிரே வந்த வாகனத்தின் முகப்பு விளக்கு கூசியதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b