Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம் , 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
கேரள மக்களின் முக்கிய அறுவடை திருவிழாவான ஓணம் பண்டிகை 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
கடந்த 16-ந் தேதி தொடங்கிய ஓணம் பண்டிகையின் முக்கிய நாளான திருவோணம் வருகிற 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கேரள போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாநில அரசு போனஸ் அறிவித்துள்ளது.
அதன்படி, போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் முன்பணமாக வழங்கப்படும். மேலும், நிரந்தர ஊழியர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் போனஸ் வழங்கப்படும்.
தற்காலிக ஊழியர்களுக்கு தலா ரூ.1,000 போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 42,549 ஓய்வூதியதாரர்களுக்கும் ஓணம் போனஸ் வழங்கப்படுகிறது.
அவர்களுக்கு தலா ரூ.1,250 வழங்கப்படும்.
இந்த போனஸ் தொகைகளை வழங்குவதற்காக ரூ.33.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜான் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA