கழிவுநீர் தொட்டியில் விழுந்த குட்டி யானை -7 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
திருவனந்தபுரம் , 22 ஆகஸ்ட் (ஹி.ச.) கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி அருகே பழைய கட்டிடத்தின் கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த குட்டி யானையை, வனத்துறையினர் சுமார் 7 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர். அதிரப்பள்ளி பகுதியில் உள்ள பழைய
A


திருவனந்தபுரம் , 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி அருகே பழைய கட்டிடத்தின் கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த குட்டி யானையை, வனத்துறையினர் சுமார் 7 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.

அதிரப்பள்ளி பகுதியில் உள்ள பழைய கட்டிடம் ஒன்றின் கழிவுநீர் தொட்டிக்குள் சுமார் 6 வயது மதிக்கத்தக்க குட்டி யானை ஒன்று எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.

தொட்டிக்குள் சிக்கிய குட்டி யானையால் வெளியேற முடியாமல் தவித்து வந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், பொதுமக்களின் உதவியுடன் குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொட்டியில் சிக்கியிருந்த குட்டி யானையை பாதுகாப்பாக வெளியே கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்துக்கு பிறகு, வனத்துறையினர் குட்டி யானையை பத்திரமாக மீட்டனர். பின்னர் குட்டி யானையை வனப்பகுதிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA