சென்னையை வளர்த்தெடுத்ததில் பெருமை கொள்கிறேன் – மு.க.ஸ்டாலின்
சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை தினத்தை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், இருப்போர், இலார் என அனைவரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387” என
MK Stalin


சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை தினத்தை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில்,

இருப்போர், இலார் என அனைவரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மேம்பாலங்கள், கோட்டங்கள், பூங்காக்கள், நவீன பேருந்து முனையங்கள், மெட்ரோ ரயில், ஐ.டி. பூங்காக்கள், ஃபின்டெக் டவர், மருத்துவமனைகள், நூலகக் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மூலம் கடந்த 60 ஆண்டுகால சென்னை வரலாறு செதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர், மாநகரத் தந்தை, துணை முதலமைச்சர், முதலமைச்சர் என பல்வேறு பொறுப்புகளில் சென்னையின் வளர்ச்சிக்கு பங்களித்ததில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்வதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “தருமமிகு அன்புமிகு சென்னை வாழ்க” எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P