Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.
நேற்று வினாடிக்கு 10,414 கன அடியாக இருந்த அணைக்கான நீர்வரத்து, இன்று வினாடிக்கு 11,308 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85.68 அடியாக உள்ளது. அணையில் மொத்தம் 47.85 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ள நிலையில், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து, மேட்டூர் அணைக்கான நீர்வரத்தில் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் அணையின் நீர்மட்டம், நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் ஆகியவற்றை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam