தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான தமிழக ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து
சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் மதுரை பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதா ஆக
முதலமைச்சர்


சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் மதுரை பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, இருவருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் எக்ஸ் தள பதிவின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டு வரும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர் நலனில் கொண்டுள்ள அக்கறைக்கு கிடைத்துள்ள இந்த உயரிய அங்கீகாரம், தமிழ்நாட்டின் கல்விச் சிறப்புக்கும் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திற்கும் பெருமை சேர்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தேசிய விருது அவர்களின் பணிக்கு மேலும் ஊக்கமளித்து, எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றட்டும் என்றும் முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P