தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக புகார்- புதுவை த.வெ.க எம்.எல்.ஏ சாய் சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
புதுச்சேரி, 22 ஆகஸ்ட் (ஹி.ச.) புதுச்சேரி அருகே திருபுவனை தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து, நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தவெக எம்எல்ஏ சாய் சரவணகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய
தவெக


புதுச்சேரி, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

புதுச்சேரி அருகே திருபுவனை தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து, நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தவெக எம்எல்ஏ சாய் சரவணகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருபுவனை தொழிற்பேட்டையில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள ஒரு தொழிற்சாலைக்குள் தவெக எம்எல்ஏ சாய் சரவணகுமார் ஆய்வு செய்வதற்காக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது தொழிற்சாலை நிர்வாகத்தினர், உரிய அனுமதியின்றி எதற்காக உள்ளே வருகிறீர்கள் எனக் கேட்டு அவரை தடுத்துள்ளனர்.

இதனால் எம்எல்ஏ மற்றும் அவருடன் சென்ற ஆதரவாளர்களுக்கும் தொழிற்சாலை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தொழிற்சாலை நிர்வாகி சிவராமகிருஷ்ணன், திருபுவனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் சாய் சரவணகுமார் எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam