Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.
விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி,
வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருவதால், அது குறித்து வெளியில் விரிவாக பேச முடியாது.
இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட வழக்கு.
ஆட்சி நடத்துவதைவிட எதிர்க்கட்சிகள் மீது வழக்குப் போடுவதிலேயே குறியாக உள்ளனர்.
சட்டப்படி இதனை நாங்கள் எதிர்கொள்வோம் என்றார்.
மேலும், முழுமையான விசாரணை நடைபெற்ற பின்னர் அதிகாரிகளே நீதிமன்றத்தில் தங்களது நிலைப்பாட்டை தெரிவிப்பார்கள் என்றும், அப்போது தானும் இந்த விவகாரம் குறித்து பேசுவேன் என்றும் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டிய அவர், காணாமல் போன ஹார்ட் டிஸ்க் குறித்து கேட்டேன்.
அதற்கு பதில் இல்லை, மின்வாரிய கடன் குறைக்கப்பட்டதாக வெள்ளை அறிக்கையில் கூறியுள்ளனர். முழுக்க முழுக்க திமுகவின் சாதனைகளையே வெள்ளை அறிக்கையில் கூறியுள்ளனர் என்று தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் பதிலளிக்க திராணியில்லாமல் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், சட்டப்பேரவை நிகழ்வுகளை மக்கள் நேரலையில் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் செந்தில் பாலாஜி கூறினார்.
மக்கள் உரிய பதிலை இவர்களுக்கு கொடுப்பார்கள். மூன்று பைல்களை அவர்கள் திறக்கட்டும்,அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? தவெக அரசு மக்களுக்கு பயனில்லாத அரசாக ஆட்சி நடத்தி வருகிறது என்றும் அவர் விமர்சித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P