Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், தற்போதைய மாநில அரசின் நிதி நிலைமை குறித்து வெளிப்படையாக பேசினார். சட்டியில் ஒன்றுமில்லை, மாநிலம் முழுவதும் கடன் சுமையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் நினைக்கிறார்.
ஆனால் இது மிகவும் சிரமமான பணி என்று குறிப்பிட்டார். கடந்த கால கடன் சுமை காரணமாகவே மாற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்த முதல்வர் விஜய் கால அவகாசம் கேட்கிறார் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
மேலும், இந்த மாற்றத்தை முதலமைச்சர் விஜய் பள்ளிகளில் இருந்து தொடங்கியிருப்பதாகவும், வரும் நாட்களில் இன்னும் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
உங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாக இருந்து முதலமைச்சர் விஜய் கொண்டு வரும் நலத்திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அந்த நிகழ்ச்சியில் கேட்டுக்கொண்டார்.
Hindusthan Samachar / vidya.b