மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்த வைரமுத்து
சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.) கவிஞர் வைரமுத்து, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். நட்பின் நிமித்தமாக அவரை சந்தித்ததாகவும், இருவரும் ஒருவருக்கொருவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதாகவ
வைரமுத்து


சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

கவிஞர் வைரமுத்து, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். நட்பின் நிமித்தமாக அவரை சந்தித்ததாகவும், இருவரும் ஒருவருக்கொருவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதாகவும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது, இருவரும் சுமார் 45 நிமிடங்கள் சட்டமன்றத்தின் நேரடி ஒளிபரப்பைப் பார்த்துள்ளனர். அப்போது, “ஜே.சி.டி. பிரபாகர் சிறப்பாக சட்டமன்றத்தை நடத்துகிறார்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக வைரமுத்து கூறியுள்ளார்.

இதற்கு, சமூக வலைதளங்களில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை “சட்டமன்றத்தின் ஆட்ட நாயகன்” எனப் பலரும் குறிப்பிடுவதாக தான் கூறியதாகவும், அதற்கு ஸ்டாலின் “அப்படியா?” எனக் கேட்டதாகவும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

பின்னர் இருவரும் காபி அருந்திவிட்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டு விடைபெற்றதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam