தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - சு.வெங்கடேசன்
மதுரை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த எம்பி சு.வெங்கடேசன் பேசுகையில், டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டத
Su Venkatesan


மதுரை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த எம்பி சு.வெங்கடேசன் பேசுகையில்,

டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தை ஒடுக்க ஜூலை 24-ஆம் தேதி டெல்லி பல்கலைக்கழகங்கள் சுற்றறிக்கை வெளியிட்டன.

அந்த சுற்றறிக்கையில் இடம்பெற்ற வாசகங்கள் ஜூலை 28-ஆம் தேதி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கூட்ட நடவடிக்கையில் அப்படியே இடம்பெற்றுள்ளது.

அதன் பின் உள்துறை செயலாளர், உயர்கல்வி செயலாளர், கல்லூரிக் கல்வி இயக்குநரின் சுற்றறிக்கையாக அது மாறுகிறது.

மோடி - ஷா களின் உத்தரவு டெல்லி பல்கலைக்கழகங்களின் உத்தரவாக மாறியது. அதே வாசகங்கள் அதைவிட மோசமாகத் தமிழக அரசின் உத்தரவாக எப்படி மாற்றப்பட்டது?

இதற்கு காரணமான தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பேசினார்.

Hindusthan Samachar / ANANDHAN