Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச)
டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏடிஎஸ்பி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், செந்தில்பாலாஜியிடம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
டாஸ்மாக்கில் டெண்டர் விடப்பட்ட விதம், டெண்டர் எடுத்த நிறுவனங்கள் தொடர்பான விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் கேட்டுப் பெற்று, அவற்றின் அடிப்படையில் செந்தில்பாலாஜியிடம் கேள்விகள் எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், டாஸ்மாக் மதுபான பாட்டிலுக்கு ரூ.10 வசூலித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, மதுபானங்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து ஒப்பந்தங்களில் முறைகேடு, டெண்டர் முறைகேடு மற்றும் கட்சி நிதி வசூலித்ததாகக் கூறப்படும் புகார்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக செந்தில்பாலாஜியிடம் விளக்கம் கேட்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணையின்போது டாஸ்மாக் டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தியுள்ள இந்த விசாரணை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ