Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
தலைமைச் செயலாளரின் நடவடிக்கைகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இடதுசாரி மாணவர் இயக்கங்களைக் குறிவைத்து தலைமைச் செயலாளர் செயல்படுவதாகவும், அரசு எந்திரத்தை தனது நோக்கத்திற்காக தவறாக பயன்படுத்தும் அளவுக்கு சென்றுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இடதுசாரி அமைப்புகள் குறிவைக்கப்படுவது தற்செயலானது எனக் கருத முடியாது என்றும், கல்வி வளாகங்களில் அமைதி என்பது மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்குவதில் தான் இருக்கிறதா என்பதை தலைமைச் செயலாளர் விளக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், தலைமைச் செயலாளர் தனது பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் என்ற முறையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீதும் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் பங்கேற்க உள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P