மறைந்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடலுக்கு இன்று மாலை வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு
சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ் திரையுலகின் மூத்த நடிகையான சௌகார் ஜானகி (வயது 94) நேற்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு திரை
veteran actress Sowcar Janaki


சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ் திரையுலகின் மூத்த நடிகையான சௌகார் ஜானகி (வயது 94) நேற்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சௌகார் ஜானகி. குணச்சித்திர வேடங்களிலும், தாய் வேடங்களிலும் தனது அபார நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

அவரது உடல் தற்போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அங்கு பொதுமக்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து, இன்று மாலை அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b