Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை , 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருமலை ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் கணிசமாக குறைந்துள்ளது.
இதனால் டோக்கன் இல்லாமல் சர்வ தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்கள் சுமார் 8 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது 22 கம்பார்ட்மென்ட்களில் மட்டுமே பக்தர்கள் காத்திருக்கின்றனர். இதனால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் வழக்கமான அளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, (சனிக்கிழமை) ஏழுமலையானை 84 ஆயிரத்து 873 பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களில் 36 ஆயிரத்து 286 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
சனிக்கிழமை ஒரே நாளில் சுவாமி உண்டியல் மூலம் ரூ.3 கோடியே 67 லட்சம் காணிக்கை கிடைத்தது.
மேலும், 4 லட்சத்து 38 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2 லட்சத்து 42 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.
திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் 3 ஆயிரத்து 523 பேருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA