Enter your Email Address to subscribe to our newsletters

கொச்சி , 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச துணை முதல்-மந்திரியும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், தனது வலது தோளுக்கு ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக கேரளா சென்றுள்ளார்.
தோள்பட்டை வலி காரணமாக சமீபத்தில் மும்பையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து, முழுமையாக குணமடைவதற்கான தொடர் சிகிச்சையின் ஒரு பகுதியாக ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொள்ள அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கொச்சி விமான நிலையத்தை வந்தடைந்த பவன் கல்யாண், அங்கிருந்து நேரடியாக திருச்சூர் சென்றார். திருச்சூர் அருகே உள்ள பிரபலமான ஆயுர்வேத மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அங்கு அவருக்கு சிறப்பு ஆயுர்வேத தெரபி சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெறும் அவர், சிகிச்சை முடியும் வரை கேரளாவில் தங்கியிருப்பார் என தெரிகிறது.
இந்த கேரள பயணம் முழுவதும் தனிப்பட்ட சிகிச்சைக்கானது என்று கூறப்படுகிறது. பவன் கல்யாணுடன் ஜனசேனா கட்சியைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகளும் கேரளா சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA