Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலுமே தற்போது தண்ணீரானது ஆர்ப்பரித்துக் கொண்டு கொட்டி வரும் நிலையில், ஆர்ப்பரித்துக் கொட்டி வரும் தண்ணீரில் ஆனந்த குளியல் போடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
குறிப்பாக, மழைக்கால சீசனானது இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ள நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்போது குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குவிந்து வருகின்றனர்.
இதன் காரணமாக, அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் இருந்து மட்டுமில்லாமல், அண்டை மாநிலமான தென்காசிிக்கு அருகில் உள்ள கேரளத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஓணம் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN