நாமக்கல்லில் முட்டை விலை ரூ.5.20 ஆக நிலைநிறுத்தம் - சென்னையில் ரூ.5.80-க்கு விற்பனை
நாமக்கல், 23 ஆகஸ்ட் (ஹி.ச.) முட்டை உற்பத்தியில் தலைநகரமாக விளங்கும் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து நிலையாக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டலம், பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலையை ஒன்று ரூ.5
நாமக்கல்லில் முட்டை விலை ரூ.5.20 ஆக நிலைநிறுத்தம் - சென்னையில் ரூ.5.80-க்கு விற்பனை


நாமக்கல், 23 ஆகஸ்ட் (ஹி.ச.)

முட்டை உற்பத்தியில் தலைநகரமாக விளங்கும் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து நிலையாக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டலம், பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலையை ஒன்று ரூ.5.20 என நிர்ணயம் செய்துள்ளது.

இதே விலைக்கு பண்ணைகளில் இருந்து முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இதனிடையே சென்னையில் இன்று முட்டை சில்லரை விற்பனை விலை முட்டை ஒன்று ரூ.5.80 என நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

போக்குவரத்து செலவு மற்றும் கையாளுதல் செலவுகள் காரணமாக நாமக்கல்லை விட சென்னையில் 60 காசு கூடுதலாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், கறிக்கோழி விலையிலும் உயர்வு பதிவாகியுள்ளது. நாமக்கல் பகுதியில் உயிருள்ள கறிக்கோழி விலை கிலோவுக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் தற்போது ஒரு கிலோ கறிக்கோழி 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீவன விலை உயர்வு மற்றும் சந்தையில் தேவை அதிகரிப்பு காரணமாக இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b