பொறியியல் சேர்க்கை 2026: 3-ம் சுற்றில் 56,294 மாணவர்களுக்கு இடஒதுக்கீடு
சென்னை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026-க்கான 3-ம் சுற்று கலந்தாய்வில் மொத்தம் 56,294 மாணவர்களுக்கு தற்காலிக மற்றும் இறுதி இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, கல்விப் பிரிவில் 6,183 தற்காலிக இடஒதுக்கீடுகளும், 48,501 இறுத
Counselling


சென்னை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026-க்கான 3-ம் சுற்று கலந்தாய்வில் மொத்தம் 56,294 மாணவர்களுக்கு தற்காலிக மற்றும் இறுதி இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, கல்விப் பிரிவில் 6,183 தற்காலிக இடஒதுக்கீடுகளும், 48,501 இறுதி இடஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 438 தற்காலிக இடஒதுக்கீடுகளும், 1,172 இறுதி இடஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் 3-ம் சுற்று கலந்தாய்வில் கல்விப் பிரிவு மற்றும் 7.5 சதவீத அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு என மொத்தம் 56,294 இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

தற்காலிக இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், தாங்கள் தேர்வு செய்துள்ள TFC மையத்திற்குச் சென்று அசல் சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டும். மேலும், இடஒதுக்கீட்டு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தைச் செலுத்தி, தற்போது ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை உறுதி செய்ய வேண்டும்.

இதன் மூலம் அடுத்தகட்ட மேல்நோக்கு இடமாற்றத்தில் பங்கேற்க முடியும்.

இந்த நடைமுறைகளை 27.08.2026-க்குள் மாணவர்கள் நிறைவு செய்ய வேண்டும்.

அதேபோல், இறுதி இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரிக்கு 27.08.2026-க்குள் நேரில் சென்று சேர்க்கை நடைமுறைகளை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் TFC மையத்தில் பதிவு செய்யாதவர்கள் அல்லது ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர்க்கையை நிறைவு செய்யாதவர்களின் இடங்கள் தானாகவே ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு ரத்து செய்யப்படும் இடங்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை உறுதி செய்து கொண்டு மேல்நோக்கு இடமாற்றத்திற்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ