மேகமலை–வருஷநாடு வனப்பகுதி ஆக்கிரமிப்பு- 118 அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
தேனி, 23 ஆகஸ்ட் (ஹி.ச.) தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருஷநாடு வனப்பகுதிகளில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 118 அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேகமலை மற்று
தேனி ஆட்சியர்


தேனி, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)

தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருஷநாடு வனப்பகுதிகளில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 118 அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேகமலை மற்றும் வருஷநாடு வனப்பகுதிகளில் உள்ள 98 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 4,000 குடும்பங்கள் வனப்பகுதியை ஆக்கிரமித்து வசித்து வருவதாகக் கூறப்பட்டு வருகிறது. இந்த ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஆக்கிரமிப்பாளர்களில் காவல்துறை, வனத்துறை, ராணுவம், வருவாய்த்துறை, மின்வாரியம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தைச் சேர்ந்த 118 அரசு ஊழியர்களும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 118 அரசு ஊழியர்கள் மீதும் அவரவர் துறைகளின் உயர் அதிகாரிகள் உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு, அது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P