Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் ஆதார் அடிப்படையிலான e-KYC சரிபார்ப்பை மேற்கொள்வதற்கான காலக்கெடு இன்றுடன் (ஆகஸ்ட் 23) நிறைவடைகிறது.
முன்னதாக ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை வழங்கப்பட்டிருந்த அவகாசம், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் அதிக நெரிசல் காரணமாக மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது.
தமிழகத்தில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் சுமார் 2.40 கோடி வீட்டு LPG இணைப்புகள் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் சுமார் 85 சதவீத வாடிக்கையாளர்கள் e-KYC-யை நிறைவு செய்துள்ள நிலையில், மீதமுள்ள 15 சதவீதம் பேர் இன்னும் e-KYC செய்ய வேண்டியுள்ளது.
e-KYC செய்யாத வாடிக்கையாளர்கள் உடனடியாக தங்களது எரிவாயு விநியோக நிறுவனத்தின் செயலி அல்லது இணையதளம் மூலம் ஆதார் அடிப்படையிலான முகஅடையாள சரிபார்ப்பை மேற்கொள்ளலாம். மேலும், அருகிலுள்ள LPG விநியோகஸ்தர் அலுவலகத்திலும் e-KYC செய்யும் வசதி உள்ளது.
காலக்கெடுவுக்குள் e-KYC செய்யாததால் உடனடியாக எரிவாயு இணைப்பு ரத்து செய்யப்படும் எனத் தகவல்கள் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், e-KYC நிலுவையில் இருப்பவர்களுக்கு எதிர்காலத்தில் LPG சிலிண்டர் முன்பதிவு, விநியோகம் அல்லது மானியம் தொடர்பாக சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களை e-KYC முடிக்க அறிவுறுத்தி வருகின்றன.
எனவே, e-KYC செய்யாத LPG வாடிக்கையாளர்கள் காலக்கெடு நிறைவடைவதற்கு முன் இந்த சரிபார்ப்பை முடித்துக்கொள்வது பாதுகாப்பானது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P