பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து அதிகரிப்பு
தருமபுரி, 23 ஆகஸ்ட் (ஹி.ச) காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 13 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்த
Increase in Cauvery water inflow at Biligundlu


தருமபுரி, 23 ஆகஸ்ட் (ஹி.ச)

காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 13 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீர்வரத்து அதிகரிப்பால் தருமபுரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கலில் காவிரி ஆற்றில் நீரோட்டம் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசல் இயக்குவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து எட்டாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது எனவும், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b