Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு சமூக நீதி விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
விடுதியில் வழங்கப்பட்ட சாப்பாடு தரமற்றதாகவும், களி போன்று இருப்பதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக, சாப்பாட்டை பாத்திரத்தில் இருந்து கைகளால் கற்களைப் போன்று எடுத்து வீசும் காட்சிகளை மாணவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், விடுதி உணவின் தரம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமானதாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டிய நிலையில், இவ்வாறு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார் எழுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உணவு தயாரிக்கப்படும் முறை, பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் உணவின் தரம் ஆகியவற்றை முழுமையாகச் சோதிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தரமற்ற உணவு வழங்கப்பட்டிருந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ