Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள தரணி சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 5-வது நாளாக இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளர்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, போராட்டம் நடைபெறும் இடத்துக்கு நேரில் சென்று தொழிலாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தொழிலாளர்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே சட்டமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த எம்.எல்.ஏ. ராஜா, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேசி பிரச்சினைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதையடுத்து, தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கான உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இதனால் தரணி சர்க்கரை ஆலை பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ