Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே
மேலவாசல் பகுதியில் பள்ளி வேன் ஒன்று மாணவர்களை ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.
மாணவர்களை வேனில் இருந்து இறக்கிவிட்ட பின்னர், ஓட்டுநர் வாகனத்தை இயக்கியுள்ளார்.
அப்போது, வேனின் பக்கவாட்டில் இருந்த 2 வயது சிறுமி திடீரென வாகனத்தின் முன்பகுதியில் ஓடியதாக கூறப்படுகிறது.
இதனை கவனிக்க முடியாமல் ஓட்டுநர் வேனை இயக்கிய நிலையில், சிறுமி மீது வாகனம் மோதியதாக தெரிகிறது.
இந்த விபத்து தொடர்பான பதைபதைக்கும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
விபத்தில் படுகாயமடைந்த 2 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமி மீது பள்ளி வாகனம் மோதிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ