கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து - 6 வாகனங்களில் தீயை அணைக்கும் பணி தீவிரம்
கோவை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.) கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் இருந்து தினந்தோறும் சேகரிக்கப்படும் ஆயிரக்கணக்கான டன் குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை குப்பை கிடங்கின் ஒரு பகுதியில
Massive fire at the Vellalur garbage dump


கோவை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)

கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் இருந்து தினந்தோறும் சேகரிக்கப்படும் ஆயிரக்கணக்கான டன் குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றி மளமளவென பரவியது. குப்பை கிடங்கில் இருந்து கரும்புகை வெளியேறி வருவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 6 வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குப்பைகள் அதிக அளவில்

குவிந்து கிடப்பதாலும், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாலும் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புகை காரணமாக அருகில் உள்ள குடியிருப்பு பகுதி மக்கள் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b