ஆடை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ - அமைச்சர் கீர்த்தனா கண்டனம்
சென்னை, 23 ஆகஸ்ட் (ஹி.ச) தன்னுடைய ஆடை மற்றும் தோற்றம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளி குறித்து அமைச்சர் கீர்த்தனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்தக
Keerthana


Hh


சென்னை, 23 ஆகஸ்ட் (ஹி.ச)

தன்னுடைய ஆடை மற்றும் தோற்றம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளி குறித்து அமைச்சர் கீர்த்தனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்தக் காணொளியில் இருப்பது தான் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

ஒருவேளை அது நானாக இருந்தாலும்கூட, அதனால் என்ன ஆக வேண்டும்?என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு பெண்ணின் உடை, தோற்றம் அல்லது மகிழ்ச்சி ஆகியவை ஏன் இன்னும் பொது விசாரணைக்குரிய விஷயங்களாகக் கருதப்படுகின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தங்களது கொள்கைகள், ஆட்சிமுறை மற்றும் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாதவர்கள், தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து புனைக்கதைகளை உருவாக்குவதாகவும் அமைச்சர் விமர்சித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான இழிவான கருத்துகளை கூறிய வரலாறு கொண்ட தலைவர்களின் ஆதரவாளர்களிடம் இதுபோன்ற செயல்களைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தன்னைப் போன்ற தோற்றம் காரணமாக அந்தக் காணொளி சர்ச்சையில் இழுக்கப்பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கோரிய அமைச்சர் கீர்த்தனா, அவர் மிகவும் அழகாக இருப்பதாகவும், தனது விருப்பப்படி தொடர்ந்து வாழ வேண்டும் என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ