எப்படி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதே எதிர்கட்சிக்கு தெரியவில்லை - அமைச்சர் ரமேஷ்
திருச்சி, 23 ஆகஸ்ட் (ஹி.ச.) திருச்சி விமான நிலையத்தில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில், முதல்வர் அவர்களை நம்பி வந்தவர்கள் எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுவார். புதிய அறிவிப்புகள்
Minister Ramesh


திருச்சி, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருச்சி விமான நிலையத்தில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது அவர் பேசுகையில்,

முதல்வர் அவர்களை நம்பி வந்தவர்கள் எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுவார். புதிய அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் வேலை புதுப்பித்து வழிபாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பட்ஜெட் முடிந்த பிறகு யார் யாருக்கு என்ன பொறுப்புகள் வழங்கப்பட வேண்டுமோ அவர்களுக்கு பதவிகள் வழங்கப்படும்.

முதலமைச்சர் மற்றும் அரசாங்கத்தை நோக்கி கேள்வி எழும்போது அனைத்து அமைச்சர்களும் பதில் சொல்வதில் என்ன தவறு, எதிர் கருத்துக்கள் இருந்தால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மற்றவர்கள் யார் பேச வேண்டாம் என சொல்வது.

12 மணியிலிருந்து இரண்டு மணி இந்து சமய அறநிலைத்துறையில் பல்வேறு அறிவிப்புகள் கொடுத்த பிறகு திட்டமிட்டு பல்வேறு பொய் பிரச்சாரங்களை நள்ளிரவு முதல் செய்து வருகின்றனர்.

அன்பில் மாரியம்மன் கோவிலில் அம்மை பாதிக்கப்பட்டவர்களை தங்குவது மற்றவர்களுக்கு நோய் பரவாதா எனவும் திமுக ஐடி சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

கூடிய விரைவில் திருச்சியில் நடைபெறும் இரண்டு பாலங்கள் பணிகள் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

திமுக தேர்தல் அறிவிப்பில் விளம்பரத்திற்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்கள். பக்தர்கள் தங்குவதற்காக சொகுசு விடுதி என்று ஆரம்பித்ததை தான் எந்த பக்தர்கள் என்பது வெளிச்சம் என்பதால் அதனை ரத்து செய்தோம்.

திருச்செந்தூர் ஆய்வுக்குப் பிறகு 90 சதவீதம் மாறிவிட்டது. வார இறுதி நாட்கள் மற்றும் முக்கிய நாட்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அதனை கையாள்வது என்பது கடினம் ஆகிவிட்டது.

பணம் பெற்றுக் கொண்டு தரிசனத்திற்கு அழைத்து வருவது என்பது சில நாட்களுக்குள் தலைகீழாக மாற்றி விட இது ஒன்றும் சினிமா கிடையாது.

ஆங்காங்கே ஒன்று இரண்டு நடந்து வருகிறது. தொடர்ந்து இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சி கேள்விக்கு அமைச்சர்கள் பதில் கூறுவதில் என்ன தவறு உள்ளது? எதிர்க்கட்சியினருக்கு மாண்பு இருக்கிறதா?

எப்படி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிக்கு தெரியவில்லை.

சட்டப்பேரவையில் சண்டை நிகழ வேண்டும் என திமுகவினர் கூச்சலிடுகின்றனர். வரிக்கு வரிக்கு கூச்சலிட்டு, தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர் என்று கூறினார்.

Hindusthan Samachar / ANANDHAN