மும்பையில் விநாயகர் சிலை சரிந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு
மும்பை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.) மும்பை புலேஷ்வர் பகுதியில் ‘புலேஷ்வராச்சா ராஜா’ விநாயகர் சிலை வரவேற்பு நிகழ்ச்சியின்போது சரிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 2 குழந்தைகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். சனிக்கிழமை இரவு 10 மணியளவில் கபூதர்கானா அருகே ஜெய்
Mumbai


மும்பை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)

மும்பை புலேஷ்வர் பகுதியில் ‘புலேஷ்வராச்சா ராஜா’ விநாயகர் சிலை வரவேற்பு நிகழ்ச்சியின்போது சரிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 2 குழந்தைகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.

சனிக்கிழமை இரவு 10 மணியளவில் கபூதர்கானா அருகே ஜெய் அம்பே சவுக் பகுதியில் உள்ள பாலராம் மெர்ச்சன்ட் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. சிலையை வரவேற்கும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில், திடீரென சிலை சரிந்து விழுந்தது.

தகவலறிந்து தீயணைப்புப் படையினர், போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

சிலை தாங்கியிருந்த கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அல்லது இணைப்புகள் தளர்ந்ததால் சிலை சரிந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P