Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
புதுடெல்லியில் விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிறுவனர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின்போது, விண்வெளி நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பங்களுக்கான புதிய பயன்பாடுகளை கண்டறிவதுடன், அவை மக்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு எளிதாக்க முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
விவசாயம், சுற்றுச்சூழல், காலநிலை கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் விண்வெளித் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், விண்வெளித் துறையில் இந்தியாவின் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை வரவேற்ற பிரதமர், உலகளவில் விண்வெளித் துறையில் இந்தியாவை முன்னணி மையமாக உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P