Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் இயங்கி வரும் தனியார் சர்க்கரை ஆலையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த ஓராண்டாக தங்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், இது குறித்து ஆலை நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என்றும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக் கோரி கேள்வி எழுப்பியதற்காக, ஊழியர்கள் சிலரை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஆலை நிர்வாகம் பணிநீக்கம் செய்ததாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இந்த அநீதியான பணிநீக்க உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், ஒரு வருடமாக நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்பதே போராடும் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் ஆலை ஊழியர்கள் கடந்த ஐந்து நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆலை நிர்வாகத்தின் பணிநீக்க நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று 5வது நாளாக ஆலையின் நுழைவாயில் முன்பு அமர்ந்து அவர்கள் அறவழிப் போராட்டம் நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b