ஆண்டிப்பட்டியில் 10 மடங்கு உயர்ந்த வாழை இலை விலை: ஒரு கட்டு ரூ.5,500-க்கு விற்பனை
தேனி, 23 ஆகஸ்ட் (ஹி.ச.) தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாழை இலை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆவணி மாத வளர்பிறை முகூர்த்த நாட்கள் காரணமாக தேவை அதிகரித்துள்ளதால், ஒரு கட்டு வாழை இலை ரூ.5,500 வரை விற்பனை செய்யப்படுகிறது.
Banana leaf


தேனி, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாழை இலை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆவணி மாத வளர்பிறை முகூர்த்த நாட்கள் காரணமாக தேவை அதிகரித்துள்ளதால், ஒரு கட்டு வாழை இலை ரூ.5,500 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் வாழை இலைகள் சந்தைப்பேட்டை மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.

கடந்த வாரம் ஒரு கட்டு வாழை இலை ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 10 மடங்குக்கும் அதிகமாக விலை உயர்ந்து ரூ.5,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சில்லறை விற்பனையிலும் வாழை இலை விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

வாழை இலைக்கு விலை உயர்வு கிடைத்துள்ளதால் ஆண்டிப்பட்டி பகுதி வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P