வெயிலின் தாக்கம் அதிகரிப்பு - திருவண்ணாமலையில் பக்தர்கள் வருகை குறைந்தது
திருவண்ணாமலை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.) நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமான திருவண்ணாமலை மாநகரில அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நாளுக்கு நாள் ஆன்மீக பக்தர்களின் எண்ணிக்கை பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக வார
Tiruvannamalai Temple


திருவண்ணாமலை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமான திருவண்ணாமலை மாநகரில அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நாளுக்கு நாள் ஆன்மீக பக்தர்களின் எண்ணிக்கை பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

குறிப்பாக வார விடுமுறை தினங்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வந்த நிலையில் திருவண்ணாமலையில் வெயிலின் தாக்கம் என்பது அதிகரித்து வருகிறது.

இதனால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு குறைந்த அளவு பக்தர்களே வருகை தந்துள்ளனர்.

வழக்கமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து 3 முதல் 4 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்வது வழக்கம்.

வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வரும் சூழலில் திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வருகை தருவது குறைந்து காணப்படுவதால் கோவிலில் பக்தர்கள் கியூ வரிசையில் சென்றபடி 1 நேரத்திற்குள் சாமி தரிசனம் செய்து வெளியேறி வருகின்றனர்.

குறிப்பாக ராஜகோபுரம் அருகே இருந்து பொது தரிசனத்திற்காக அனுமதிக்க கூடிய பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்யக் கூடிய வகையில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.

வெயிலின் தாக்கத்திலிருந்து பக்தர்களை பாதுகாக்க கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஆங்காங்கே குடிநீர் கேன்கள் வைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்பட்டும் வருகின்றன.

Hindusthan Samachar / ANANDHAN