Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் வழங்கப்பட்டதை, காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மறந்துவிட்டு பேசுவதாக பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி. செல்வம் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
முழு விருந்து
(தவெக அமைச்சரவை) பரிமாறிய இலையில் ஏதோ ஒன்று குறையாகத் தென்பட, கடைசியாக வைக்கப்பட்ட ஊறுகாய் தான் காங்கிரஸ் கட்சி என்பதை மறந்துவிட்டு மாணிக்கம் தாகூர் பேசுகிறார்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ஊறுகாய்க்கு நடு இலையில் இடம் கொடுத்ததைப் போல, அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் விஜய் இடம் கொடுத்துள்ளார். அரை நூற்றாண்டுக்குப் பிறகு அமைச்சரவையில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததை பெருமிதமாகக் கருதாமல், ‘எங்களால் தான் விஜய் முதல்வர்’ என மாணிக்கம் தாகூர் திமிராக பேசுகிறார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்த பர்னிச்சரையும் உடைத்துவிட்டீர்கள் என்றால், தமிழ்நாட்டில் தனித்து விடப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்றும் வினோஜ் பி. செல்வம் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P