Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
சந்திரயான்-3 இல் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி அதிகாரபூர்வமாக 'தேசிய விண்வெளி தினமாக' அறிவிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். இதன்படி, தேசிய விண்வெளி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
தேசிய விண்வெளி தினத்தையொட்டி மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது,
தேசிய விண்வெளி தினம்
இனிய தேசிய விண்வெளி தின வாழ்த்துகள்! நிலவிலிருந்து சூரியன் வரையிலும், அதற்கும் அப்பாலும், இந்தியாவின் விண்வெளிப் பயணம் என்பது உறுதி, புதுமை மற்றும் தேசியப் பெருமிதத்தின் ஒரு காவியமாகும்.
சாத்தியங்களின் எல்லைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தி, ஒரு புதிய தலைமுறையை வானத்தைத் தாண்டி கனவு காணத் தூண்டும் இஸ்ரோவின் தலைசிறந்த விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் எங்கள் வணக்கங்கள்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b