ரக்ஷாபந்தனை முன்னிட்டு உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்
லக்னோ , 23 ஆகஸ்ட் (ஹி.ச.) ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேசத்தில் பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு
A


லக்னோ , 23 ஆகஸ்ட் (ஹி.ச.)

ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேசத்தில் பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ரக்ஷாபந்தன் பண்டிகையையொட்டி பெண்களுக்கு இலவச பஸ் பயணத்தை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வழங்கி வருகிறார்.

அந்த வகையில், இந்த ஆண்டும் பெண்களுக்கு இலவச பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, உத்தரபிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (யு.பி.எஸ்.ஆர்.டி.சி.) பேருந்துகளில் ஆகஸ்டு 27-ந் தேதி இரவு முதல் ஆகஸ்டு 28-ந் தேதி இரவு வரை பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.

ரக்ஷாபந்தன் பண்டிகையையொட்டி பெண்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று சகோதரர்களுடன் பண்டிகையை கொண்டாடுவதற்கு இந்த இலவச பயண சலுகை உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA