இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்- இந்தியா பேட்டிங் தேர்வு
கொழும்பு , 23 ஆகஸ்ட் (ஹி.ச.) இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
A


கொழும்பு , 23 ஆகஸ்ட் (ஹி.ச.)

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா

1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் உள்ள சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இதையொட்டி போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஆகியோர் களம் இறங்கினர்.

தொடக்கத்தில் இருந்தே இருவரும் நிதானமாகவும், அதே நேரத்தில் ரன் குவிக்கும் நோக்கிலும் ஆட்டத்தை தொடங்கினர்.

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

முதல் டெஸ்டில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் களம் இறங்கியுள்ளது.

அதேவேளையில், இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற கட்டாயத்தில் இலங்கை அணி உள்ளது.

இதனால் சொந்த மண்ணில் இந்திய அணிக்கு கடும் சவால் அளிக்க இலங்கை வீரர்கள் தயாராகி உள்ளனர்.

தொடரை கைப்பற்ற இந்தியாவும், தொடரை சமன் செய்ய இலங்கையும் போராடுவதால் இந்த டெஸ்ட் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA