ஹைதராபாத் விபத்து எதிரொலி - சென்னையில் ‘டாக்சிக்’ படக்குழு நிகழ்ச்சி ரத்து
சென்னை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.) ஹைதராபாத்தில் ‘Toxic’ திரைப்பட ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட விபத்தின் எதிரொலியாக, சென்னையில் திட்டமிடப்பட்டிருந்த படக்குழுவினரின் புரமோஷன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. நடிகர் யஷ் நடிப்பில், கீது மோகன்தாஸ
Toxic


சென்னை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஹைதராபாத்தில்

‘Toxic’ திரைப்பட ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட விபத்தின் எதிரொலியாக, சென்னையில் திட்டமிடப்பட்டிருந்த படக்குழுவினரின் புரமோஷன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

நடிகர் யஷ் நடிப்பில், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதையொட்டி படக்குழுவினர் பல்வேறு நகரங்களில் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ஹைதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டி பல்கலைக்கழகத்தில்

‘Toxic’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான மாணவர்கள் மற்றும் ரசிகர்கள் பங்கேற்றிருந்த நிலையில், ஒலி அமைப்புக்காக அமைக்கப்பட்டிருந்த கட்டமைப்பு எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

விபத்தைத் தொடர்ந்து நடிகர் யஷ் தனது நிகழ்ச்சியை நிறுத்தியதுடன், காயமடைந்தவர்களின் நிலை குறித்து விசாரித்தார். மேலும், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஹைதராபாத் சம்பவத்தை கருத்தில் கொண்டு, சென்னையில் ‘Toxic’ படக்குழு சார்பில் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், புரமோஷன் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட விபத்து மற்றும் அதன் தொடர்ச்சியாக சென்னையில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ